வெள்ளி, 21 அக்டோபர், 2016

அறிமுகம்

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே! வணக்கம்! 
“எழுத்தறிவித்தவன் இறைவன்” என்றனர் நம் முன்னோர். அத்தகைய புனிதப்பணியில்  ஈடுபட்டிருக்கும் நாம் காலப்புதுமைகளுக்கேற்ப நம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கற்பித்தல் அணுகுமுறைகளில் புதுமைகள் புகுத்தப்பட வேண்டும். இன்று அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப் பட்டுவிட்டன. கல்வித்துறையில் தகவல் பரிமாற்றத்தில் இடம் பெற்றுள்ள அளவுக்குக் கற்பித்தலில் இடம் பெறவில்லை. ஆயினும் அதற்கான முயற்சிகளில் அரசும் கல்வித்துறையும் இறங்கி முழுவீச்சுடன் செயல்படுகின்றன.


இத்தருணத்தில் ஆசிரியர்களுக்கு கணினிப்பயிற்சி, ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் மின்னணு வகுப்பறைகள் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தும் அளவுக்கு ஆசிரியர்களும் பயிற்சி பெற வேண்டும். 


கணினி பயன்படுத்தி பாடப்பொருள்களை உருவாக்கவும், பகிர்ந்திடவும், கற்பித்திடவும் அறிந்திருக்க வேண்டும். ICT (Information Communocation Technology) என்னும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அறிந்தவர்களாய் ஆசிரியர்கள் உருவாக வேண்டும்.
இதனால் ஆசிரியர்களின் பணி எளிதாகிறது. 


காலத்திற்கேற்ப மாற்றங்களை வரவேற்போம்!
ஆசிரியர்களின் முயற்மிசியில்ன்ன உருவான மின்னணுப்பாடங்களை இங்கு பகிர்வோம். பயன்படுத்துவோம்.

நாமும் உயர்வோம் கல்வித்துறையையும் உயர்த்துவோம். கற்றல் கரும்பாகட்டும்.

மறைவாய் நமக்குள் பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமையில்லை -பாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக